பதவியை விட்டு வந்தவர்கள் பதவிக்காகப் போராடுவதும்
பணத்தை உதறிவிட்டு வந்தவர்கள் பணத்திற்காக ஓடுவதும்
கர்த்தரின் கையில் கொடுத்த எதிர்காலத்தை
கையில் எடுத்து கவiலை கொள்வதும்
பின்னடைய மாத்திரமல்ல பின்னோடச் செய்துவிடும்
புயல் அடிக்கிறது என்று புதைந்துகொள்ளாதே
வெளியிலேயே நில் உன்னை அது
வான்வெளிக்குக் கொண்டு செல்லட்டும்
உனது அம்பு எதிரிகளை வீழ்த்தும்
எதிரிகளின் அம்பு உன்னை உயர்த்தும்
பாதையில் வருவதற்குப் பயந்து
தவறான பாதையில் செல்லாதே
தவறான பாதையில் செல்பவர்தான்
தனது பாதையைக் காட்ட பயப்படுவர்
எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
எதுவும் தெரியாதவரும் எவருமில்லை
எல்லாம் தெரிந்தவர் போல நடிப்பவரும்
எதுவும் தெரியாதவர் போல நடிப்பவருமே
உலகத்தில் அதிகம்