Sunday, 29 July 2012

பத்திரமாகும் நிலத்துக்கு


 

ஊர் கட்டுப்படுத்த முடியுமா

பாலையில் நின்றாலும் சோலையில் நின்றாலும்
நீ மரம் என்பதை மனதில் கொள்
நீ பூக்கலாம் ஈக்களை ஈர்க்கலாம்
நீ காய்க்கலாம் காய்களைக் கனிக்கலாம்
உனக்குள்ளே நடக்கும் மாற்றங்களை
ஊர் கட்டுப்படுத்த முடியுமா

போராட்டம் உண்டு

இறைவா,
இடறி இடறி என் கால்களில்
விரல்களே வீழத் தொடங்கிவிட்டன - உன்னை
இன்னமும் தொடருகிறேன்
உன்னிடம் வரும்போது எனக்கு
உயிர் இருந்தால் போதும்
தடைகள் வந்தாலும் தாண்டிச் செல்வேன்
தடுக்கி விழுந்தாலும் இறைவனைத் தொட்டுவிடுவேன்
இறுதி வெற்றி எனக்குத்தான்
மரணத்தை வென்றவரை அடைய எனக்கும்
மரணம் வரை போராட்டம் உண்டு

மயானம் வென்றுவிட்டது

மனதைக் காக்க மதிலால் முடியாது
மதிலைத் தாண்டியும் மனது ஓடும்
மனது ஓடும் மதிலால் முடியாது
மனதை விட்டு விட்டு மதிலே வாடும்
மதிலுக்குள் வந்தால் மனதுக்கு வாழ்வு
மதிலை மறந்தால் மனதுக்கு சாவு
மனதைக் கொன்ற பலரை மயானம் வென்றுவிட்டது

Friday, 27 July 2012

எதிலிலும் எழுதலாம்

எதைக் கொண்டும் எதிலிலும் எழுதலாம்
உன்னிடம் ஏதாவது இருந்தால்

Wednesday, 25 July 2012

அநியாயம்

ஒன்றான உலகத்தில் சத்துரு
மனிதனை இரண்டாக்கிவிட்டான்
ஒன்றாக்க வந்தவரையும் கொன்றுவிட முயன்றான்
வென்று சென்ற அவரை
வெல்ல இயலாது திகைக்கிறான் - அவர்
நின்று தீர்ப்பார் நியாயம்
அன்று தெரியும் அவன் அநியாயம்

Saturday, 21 July 2012

ஊனமானது உன் கண்தான்

காதலித்து திருமணம் செய்து, சிலகாலம் சென்ற பின்னர் அவளைத் தள்ளிவிட்ட செய்தியினை செய்தித்தாள் ஒன்றில் வாசித்தபோது எனது மனம் தாங்காது உதித்த வரிகள்


காதலிக்கும்போது அவள் அழகி
கல்யாணத்திற்கு முன்னே பழகி
கட்டிலிலே இளகி
இன்றைக்கு அவள் உனக்கு கிழவியா?

தேடிப்போனாய் அவளை அன்று
தள்ளிப்போடுகிறாய் அதேவளை இன்று
கிள்ளித் தின்று அவளை வீசினால்
எள்ளிப் பேசும் உலகு உன்னை

பெற்றோரை வீசி உன் பின்னே வந்தாள்
பெற்றெடுத்து பிள்ளையையும் கண்முன்னே தந்தாள்
உற்றுப்பார்த்து உற்றுப்பார்த்து  ஊனமானது
அவள் அழகல்ல உன் கண்தான்

வேறொருவனைப் பார்க்காமல் உன்னையே பார்த்த
கண்கள் மிதக்கின்றன கண்ணீரில் இன்று
ஒருத்தியை அடைந்த பின்னர் வேறொருத்தி வேண்டுமென்றால்
நீ கணவன் அல்ல விபச்சாரக்காரன்

அனுமதி தா

மனிதனுக்கு

உயிரைக் கொடுத்தவன் உயிரையும் கொடுத்தான்

உலகினை வென்றும் இன்னும் உன்னிடம் தோற்கிறான்

உன்னில் நுழைய தன்னில் ஏதுமின்றி

உன்னிடமே கேட்கிறான் அனுமதி தா என்று

Wednesday, 18 July 2012

மனது பிடிபடும்

மனதுக்குப் பிடித்தது என மயங்காதே

நீ மயங்கும் இடத்தில்

உன் மனது பிடிபடும்

Wednesday, 4 July 2012

பின்னோடச் செய்துவிடும்



பதவியை விட்டு வந்தவர்கள் பதவிக்காகப் போராடுவதும்
பணத்தை உதறிவிட்டு வந்தவர்கள் பணத்திற்காக ஓடுவதும்
கர்த்தரின் கையில் கொடுத்த எதிர்காலத்தை
கையில் எடுத்து கவiலை கொள்வதும்
பின்னடைய மாத்திரமல்ல பின்னோடச் செய்துவிடும்