Sunday, 26 February 2012

கண்ணியம்



அழித்தலும் உதித்தலும்

விழித்திரையில் பதித்தலும் - ஓவியம்

பழித்தலும் இழித்தலும்

வழித்தபின் கழித்தலும் - பாவியியம்

ஓழித்தலும் ஒளித்தலும்

சலித்தபின் மலித்தலும் - பிசாசியம்

முழித்தலும் இளித்தலும்

பலித்தபின் வழிதலும் - அழிவியம்

தெளித்தலும் சுழித்தலும்

வலித்திட மொழிதலும் - கேலியிம்

ஒலித்தலும் அழித்தலும்

விழித்தபின் குளித்தலும் - இறையியம்

தெளிதலும் ஒளிர்தலும்

பளிங்குலகில் நுழைதலும் - கண்ணியம்

Tuesday, 21 February 2012

வெற்றி நமதே

எதிரிகளின் வார்த்தைகளுக்கு
காதுகளை  இறையாக்காதே
சிந்தைகளில் சுமந்து சுமந்து
சித்தத்தை மறந்துவிடாதே
யுத்தத்திற்கு வந்து நின்றாலும்-அவன்
சத்தத்திற்கு அஞ்சிவிடாதே
குடும்பமாய் எதிர்கொண்டால்
குலைத்துவிடலாம் அவன் திட்டத்தை
சுற்றி அவன் வந்தாலும்
வெற்றி என்றும் நமதே

Sunday, 19 February 2012

இ​றைவனின் ம​றை

இறந்தாலும் எழுதப்படும் வாழ்க்​கை ​வேண்டும்
மரித்தாலும் ​பேசப்படும் சாட்சியாக​வேண்டும்
சரீரம் அழிந்த பின்னும் சந்ததி ​உருவாக​வேண்டும்
சுவாசம் ஒழிந்தாலும் பலர் ​சொந்தம் பாராட்ட​வேண்டும்
சத்தியம் ​பேசும் சரித்திரமாக​வேண்டும்
இ​றைவனின் ம​றையில் நீ இடம்​பெற​வேண்டும்

Saturday, 18 February 2012

உனது வாழ்க்கை

அழைப்பை,,,

சிந்திக்க மறந்துபோனவர்கள் பலர்
சிந்தித்தும் பறந்துபோனவர்கள் பலர்
சிந்தனையில் மரத்துப்போனவர்கள் பலர்
சிந்தித்தே மரித்துப்போனவர்கள் பலர்
சிந்தித்துச் சிறக்கச் செயல்படுவோரோ சிலர்
அழைப்பிற்காய் அர்ப்பணிப்பதும்
அர்ப்பணிப்பிற்காய் உயிர் கொடுப்பதும்
உயிர் கொடுத்தபின் அவரோடு உறவாடுவதுமே
உனது வாழ்க்கை

படைத்தவனின் நியதி

மணக்கும் மலர்கள் மரணமடைவதும்
மாலையில் சூரியன் மறைந்து போவதும்
வாழ்ந்த வாழைகள் வாழ்விழப்பதும்
வாழும் மனிதருக்கு வாழ்வளிப்பதும்
கனிகள் காய்கள் கறியாவதும்
கால்நடைகள் வயிற்றில் கல்லறையாவதும்
சிசுக்கள் வயிற்றில் செதுக்கப்படுவதும்
சரீரம் மனிதனில் சவமாவதும்
படைத்தவனின் நியதி
படைத்தவனின் நியதிக்குப் பயப்படாதே இனி நீ

மயானம்​கொடுத்ததுஎவ்வளவு

நீ வராமல் விடியாது

யுத்த சத்தம்

துருகம் இ​ணைப்பவன்

சத்தியமே சத்துரு

தன்னுடைய குற்றங்களை மறைக்க
மற்றர்களின் குற்றங்களையே பேசுபவர்கள்
தன்னுடைய பாவங்களை மறைத்து
மற்றவர்களைப் பாவி பாவி என பிரசங்கிப்பவர்கள்
தன்னுடைய அநீதியை மறைக்க
மற்றவர்களின் நீதியை அழிப்பவர்கள்
சத்தியத்தைப் பிரசங்கித்தாலும்
சத்தியமே அவர்களின் சத்துரு

ஒரு பிறப்பு

இயேசு ஒரு முறை பிறந்ததால்
இன்று எல்லோருக்கும் உண்டு மறுபிறப்பு
மறு பிறப்பு அடையாதோர் - அவரின்
ஒருபிறப்பை ஆசரிப்பதில் அர்த்தமில்லை

அலைகள் கண்ணீர் வடிக்கட்டும்

கலைகளுக்கு மேல் அலைகள் வந்து
அலைகளுக்குள் கலைகள் அமிழ்ந்து
கண்ணீர் வடிக்கும் இளைஞனே
இலைகள் கூட அலையில் மிதக்கும் - உன்
கலைகள் மட்டும் ஏன் கல்லயாய்ப் போனது?
மலையாய் நில் அலைகள் கண்ணீர் வடிக்கட்டும்

திரையில் மறைவது இயலாதே

இறைவன் உன்னை மறப்பதில்லை
மறைவாய் என்றும் இருப்பதில்லை
கறையாய் நீ இருந்துவிட்டால்
மறைவாய் தெரிவார் அவர் உனக்கு
மறைவாய் ஓடி மறைந்தாலும் - அவர்
திரையில் மறைவது இயலாதே

சகலமும் உன்பக்கம்

சத்துரு அழிவது அவனது விதி
சத்தியம் மனதில் நீ இதை பதி - அவன்
சதியினால் அடையாதே நீ ஏதும் பீதி
சகோதரன் காதினில் தினம் இதை போதி
சங்கடம் தந்தாலும் சத்தியரைத் துதி
சகலமும் உன்பக்கம் இது இறைவனின் நீதி

மனமே உன்னை பிணமாக்கிவிடும்

சிறந்தது சிறந்தது எனக் காத்திருந்து
இருந்ததையும் வந்ததையும் விட்டுவிட்டு
வருத்தத்தையே வாழ்க்கையில் சுமந்துகொண்டு
வாழ்கையை வெறுப்பதால் பயனேது
இன்னும் இருப்பது இன்றும் சிறந்ததே
மதிக்கத்தான் உனக்கு மனம் வேண்டும் - இல்லையேல்
மனமே உன்னை பிணமாக்கிவிடும்

இருப்பதை இழந்துவிடாதே

இழந்ததை நினைதது நினைத்து இருப்பதை இழந்துவிடாதே
நிழலுக்காக நிஜத்தை பரிகொடுக்காதே
வாடிய மலரிடத்தில் மணத்தைத் தேடாதே
மரணம் விழுங்கியதை மனதில் சுமக்காதே
கண்ணீர் வடித்து வடித்து உன்னை நீயே கரைத்துவிடாதே
காலம் எல்லாம் கர்ததர் கரத்தில் என்றும் நீ மறந்துவிடாதே

சதையான சரீரம்

இதைக் கொடுத்தாலும்
அதைக் கொடுத்தாலும்
எதைக் கொடுத்தாலும்
சதையான சரீரம் ஆலயமாகவேண்டும்
இறைவனுக்கு

நீ காரணமாகிவிடாதே

பலரது பலம் பலரைப் பெலவீனப்படுத்துகிறது
சிலரது குணம் சிலரைக் கூளமாக்குகிறது
அநேகரது ஆவி அநேகரை அவித்துப் போடுகிறது
கனிகள் கர்த்தரின் கரத்தில் சேரும் முன்
க​றைகளாகி த​ரையி​லே​யே  அழுகிவிட
நீ  காரணமாகிவிடா​தே!