எதைக் கொண்டும் எதிலிலும் எழுதலாம்
உன்னிடம் ஏதாவது இருந்தால்
Friday, 27 July 2012
எதிலிலும் எழுதலாம்
Wednesday, 25 July 2012
அநியாயம்
ஒன்றான உலகத்தில் சத்துரு
மனிதனை இரண்டாக்கிவிட்டான்
ஒன்றாக்க வந்தவரையும் கொன்றுவிட முயன்றான்
வென்று சென்ற அவரை
வெல்ல இயலாது திகைக்கிறான் - அவர்
நின்று தீர்ப்பார் நியாயம்
அன்று தெரியும் அவன் அநியாயம்
Saturday, 21 July 2012
ஊனமானது உன் கண்தான்
காதலித்து திருமணம் செய்து, சிலகாலம் சென்ற பின்னர் அவளைத் தள்ளிவிட்ட செய்தியினை செய்தித்தாள் ஒன்றில் வாசித்தபோது எனது மனம் தாங்காது உதித்த வரிகள்
காதலிக்கும்போது அவள் அழகி
கல்யாணத்திற்கு முன்னே பழகி
கட்டிலிலே இளகி
இன்றைக்கு அவள் உனக்கு கிழவியா?
தேடிப்போனாய் அவளை அன்று
தள்ளிப்போடுகிறாய் அதேவளை இன்று
கிள்ளித் தின்று அவளை வீசினால்
எள்ளிப் பேசும் உலகு உன்னை
பெற்றோரை வீசி உன் பின்னே வந்தாள்
பெற்றெடுத்து பிள்ளையையும் கண்முன்னே தந்தாள்
உற்றுப்பார்த்து உற்றுப்பார்த்து ஊனமானது
அவள் அழகல்ல உன் கண்தான்
வேறொருவனைப் பார்க்காமல் உன்னையே பார்த்த
கண்கள் மிதக்கின்றன கண்ணீரில் இன்று
ஒருத்தியை அடைந்த பின்னர் வேறொருத்தி வேண்டுமென்றால்
நீ கணவன் அல்ல விபச்சாரக்காரன்
வேறொருவனைப் பார்க்காமல் உன்னையே பார்த்த
கண்கள் மிதக்கின்றன கண்ணீரில் இன்று
ஒருத்தியை அடைந்த பின்னர் வேறொருத்தி வேண்டுமென்றால்
நீ கணவன் அல்ல விபச்சாரக்காரன்
அனுமதி தா
மனிதனுக்கு
உயிரைக் கொடுத்தவன் உயிரையும் கொடுத்தான்
உலகினை வென்றும் இன்னும் உன்னிடம் தோற்கிறான்
உன்னில் நுழைய தன்னில் ஏதுமின்றி
உன்னிடமே கேட்கிறான் அனுமதி தா என்று
Wednesday, 18 July 2012
மனது பிடிபடும்
மனதுக்குப் பிடித்தது என மயங்காதே
நீ மயங்கும் இடத்தில்
உன் மனது பிடிபடும்
Wednesday, 4 July 2012
பின்னோடச் செய்துவிடும்
பதவியை விட்டு வந்தவர்கள் பதவிக்காகப் போராடுவதும்
பணத்தை உதறிவிட்டு வந்தவர்கள் பணத்திற்காக ஓடுவதும்
கர்த்தரின் கையில் கொடுத்த எதிர்காலத்தை
கையில் எடுத்து கவiலை கொள்வதும்
பின்னடைய மாத்திரமல்ல பின்னோடச் செய்துவிடும்
Saturday, 24 March 2012
வேதனை எதற்கு?
சிந்திக்கும் உன்னை சிந்தியாதவர்கள்
நிந்தித்து முந்திக்கொள்வார்கள்
வேறுவிதமாய் அவர்கள் சிந்திப்பதற்கும்
வேராகியது உன் சிந்தைதானே
வேதனை எதற்கு?
நிந்தித்து முந்திக்கொள்வார்கள்
வேறுவிதமாய் அவர்கள் சிந்திப்பதற்கும்
வேராகியது உன் சிந்தைதானே
வேதனை எதற்கு?
Subscribe to:
Posts (Atom)